2025 மே 19, திங்கட்கிழமை

தமிழகத்தில் எனக்கு பிரச்சினை: அஞ்சலி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதனால் தான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

தமிழில் வெளியான 'ஆதலால் காதல் செய்வீர்' திரைப்படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. ஹைதராபாதில் நடந்த இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

விழாவில் அவர் பேசுகையில், 'ஆதலால் காதல் செய்வீர்' திரைப்படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளேன்.

'ஆதலால் காதல் செய்வீர்' திரைப்படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை. இந்த திரைப்படம் ஆந்திராவில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X