Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
க்ரோய் சாவ் எனும் சீனப் பெண்ணின் இயக்கத்தில் உருவான நோ மேட்லாண்ட் எனும் திரைப்படத்துக்கு 93ஆவது ஒஸ்கார் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெறும் ஒஸ்கார் விருது விழாவிலேயே இந்த விருதுககள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, சிறந்த படத்துக்கான விருதை சுவீகரித்த இந்த திரைப்படம், சிறந்த நாயகிக்கான விருதையும் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் சுவிகரித்துள்ளது.
ஒஸ்கார் 2021: விருதுகள் விபரம்
உலகளாவிய ரீதியில் திரைப்படத்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 93 ஆவது ஒஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 ஆம் திகதி இரவு 8 மணிக்கும், இலங்கை நேரப்படி ஏப்ரல் 26 காலை 5.30 கும் இவ்விழா ஆரம்பமாகியது.
விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் முக்க கவசம் அணியாவிட்டாலும் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் ஒஸ்கார் விருது நடைபெற்றது. இதனால் ரெஜினா கிங், இவ்விழாவை ஆரம்பித்து வைத்தார்.
அதிக விருதுகளை பெறுமென எதிர்பார்க்கப்பட்ட தி ஃபாதர் படம் ஒரு விருதினை மட்டுமே பெற்றது. ஆனால் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை ஆகிய 3 முக்கிய பிரிவுகளில் நோமட்லேண்ட் படம் அதிகபட்சமாக 3 விருதுகளை தனதாக்கிக்கொண்டது.
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதினை பெறும் இரண்டாவது பெண் என்ற பெருமையை சீன நாட்டை சேர்ந்த டைரக்டர் சோலி ஜாவோ பெற்றுள்ளார். ஒஸ்காரின் 93 வருட வரலாற்றிலேயே பெண் இயக்குனருக்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனர் விருது கிடைத்திருக்கிறது.
ஒஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்டவர்களின் விவரம்:
சிறந்த படம் - நோ மேட்லாண்ட்
சிறந்த இயக்குனர் - க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்)
சிறந்த நடிகர் - ஆன்டணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)
சிறந்த நடிகை - ஃபிரான்ட்சிஸ் மெக்டோர்மென்ட் (நோ மேட்லாண்ட்)
சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்
சிறந்த வெளிநாட்டு படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சோல்
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்
சிறந்த லைவ் அக்சன் குறும்படம் - டூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் (மங்க்)
சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் நீல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)
சிறந்த திரைக்கதை - எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)
சிறந்த தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் ஹாம்ப்டன், புளோரியன் செல்லர் (தி பாதர்)
சிறந்த பின்னணி இசை - ட்ரெண்ட் ரெஸ்னர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)
சிறந்த பாடல் - பைட் ஃபார் யூ, ஜுடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா
சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)
சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)
ஆடை வடிவமைப்பு - அன் ரோத் (பிளாக் பாட்டம்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)
சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெக்கர், ஜேமி பக்ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)
கொரோனா பெருந்தொற்று காரணமாக, லோஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர், யூனியன் ஸ்டேஷன் ஆகிய இரண்டு இடங்களில் நடந்தது. 2001ஆம் ஆண்டு முதல் ஒஸ்கார் விருது நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் டால்பி தியேட்டரில் நடத்தப்படுவது வழக்கம்.
முன்னதாக, இந்த ஆண்டு நிகழ்ச்சி இலண்டனில் உள்ள அரங்கிலும் பாரிஸிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டது. ஆனால், பெருந்தொற்று தீவிரம் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காணொளி வாயிலாக நிகழ்ச்சியை நடத்த உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ல் உயிரிழந்த இரண்டு பெரும் சினிமா ஜாம்பவான்களான நடிகர் இர்ஃபான் கான் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பானு அதயா ஆகியோர் 93ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஒஸ்கார் பரிந்துரை பட்டியலில் ஒரு இந்திய படம் கூட இடம்பெறாத நிலையில், இந்திய திரையுலகை சேர்ந்த இருவர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா
சிறந்த இயக்குனர்- ஆன்டணி ஹாப்கின்ஸ்
சிறந்த இயக்குனர்- ஆன்டணி ஹாப்கின்ஸ்
சிறந்த நடிகை - ஃபிரான்ட்சிஸ் மெக்டோர்மென்ட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
18 minute ago
25 minute ago