2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’800’ ட்ரெய்லரை வெளியிடும் சச்சின்

Simrith   / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான '800' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை, செவ்வாய்க்கிழமை மும்பையில் வெளியிடப்படவுள்ளது.

51 வயதான இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது 800 ஆவது விக்கெட்டுடன் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

800 படத்தின் படப்பிடிப்புகள் இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X