Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 30 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எடப்பாடி பழனிசாமிக்கு( E.P.S) நடிகர் அஜித்குமார் வாழ்த்துத் தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24 ஆம் திகதி காலமானர். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அஜித்குமாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமியும் ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்(அ.தி.மு.க )பொதுச்செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அண்மைக்காலமாக அரசியலை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில் இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகர் அஜித் குமார் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளமை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
47 minute ago
51 minute ago