Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகை குட்டி பத்மினியுடன் சிரித்தபடி அவருடைய அருகில் அமர்ந்திருக்கும் நடிகை யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அந்த நடிகையை அடையாளம் கண்டறிந்தனர்.
அந்த நடிகை வேறு யாரும் கிடையாது கரகாட்டக்காரன் கனகா தான். இப்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணப்படும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில், நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்திருக்கிறார். அப்போது இருவரும் தங்களுடைய நினைவுகளை பேசி மகிழ்ந்திருக்கின்றனர்.
நடிகை கனகா 1989 ஆம் ஆண்டு ராமராஜனுக்கு ஜோடியாக கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த சில வருடங்களாக திரை துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை கனகா பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார் என்று தெரிகிறது.
தன்னுடைய தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை.. காதலில் ஏற்பட்ட பிரச்சனை.. சொத்து தகராறு.. என பல்வேறு தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் தற்போது உடல்நல பிரச்சனைகளுக்கும் ஆளாகி இருக்கும் இவர் மற்றும் குட்டி பத்மினி இருவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஹோட்டலில் சந்தித்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
38 minute ago
51 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago
23 Aug 2025