2025 மே 03, சனிக்கிழமை

அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன் மீது நடவடிக்கை?

Ilango Bharathy   / 2023 மே 17 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல பொலிவூட் நடிகர்களான அனுஷ்கா சர்மா மற்றும் அமிதாப் பச்சன் மீது மும்பை பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த திங்கட் கிழமை அமிதாப் பச்சன்  படப்பிடிப்புக்கு செல்ல தனது ரசிகர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். அதே போன்று  அனுஷ்கா சர்மாவும்  வீதி மறிக்கப்பட்டிருந்ததால் தனது மெய் பாதுகாவலருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

  இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இருவரும் ஹெல்மட் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இருவருக்கும் எதிரான புகார்கள் அதிகரிக்கத் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து மும்பை பொலிஸார், அனுஷ்கா சர்மா மற்றும் அமிதாப் பச்சன் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர். 

இந்நிலையில் ”நான்  எந்த போக்குவரத்து விதிகளையும் மீறவில்லை நாங்கள் மும்பையில் உள்ள தெருவில் ஷூட்டிங் செய்துகொண்டிருந்தோம்.

நான் விளையாட்டாக படக்குழுவில் உள்ள ஒருவரின் பைக்கில் ஏறினேன். நாங்கள் ஒரு இன்ச் கூட நகரவில்லை. நான் உண்மையாக வேலைக்கு தாமதமாகும் போது இதுபோல செய்வதுண்டு.  ஆனால் ஹெல்மட் அணிந்து அனைத்து வீதவிதிகளையும் பின்பற்றி தான் செய்வேன்.

உங்களுக்கு கவலையை ஏற்படுத்தியதற்காகவும் போக்குவரத்து விதிகளை மீறும் தவறான கருத்தை ஏற்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் விதிகளை மீறவில்லை”என  அமிதாப் பச்சன்  விளக்கமளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X