J.A. George / 2022 மார்ச் 08 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் பாலா. இவர் அடுத்ததாக நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் பாலா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
முத்து மலர் என்பவரை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகளும் உள்ளார்.
திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில் நான்கு வருடங்களாக பிரிந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்கி சட்டரீதியாக பிரிந்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
49 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026