2025 மே 07, புதன்கிழமை

அழகால் அசத்தும் அழகு…

J.A. George   / 2021 மார்ச் 30 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு“கல்லூரி”திரைப்படம் தமிழில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.

அதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட இவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் பழம்பெரும் தமிழ், ஹிந்தி நடிகையாக இருந்த நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திலும் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

எப்போதும் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பதிவில், தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை பழக்கமாகக் கொண்டு உள்ளார்.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷுட் ஒன்றை எடுத்து அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அதில் பார்பி பொம்மை போன்று பிங்க் நிற உடையணிந்த தமன்னா பார்ப்பதற்கு பொம்மையைப் போலவே காட்சி அளிக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X