2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் தலைநகரான  கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற  ‘மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில்‘ கலந்துகொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்  5 தங்க பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதன்படி 50 மீற்றர், 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கங்களைத் தட்டி சென்று உள்ளார்.

இந்த மகிழ்ச்சியை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

கடந்த ஆண்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, 3 தங்க பதக்கங்களையும் ,2 வெள்ளி பதக்கங்களையும் வென்று வேதாந்த் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X