Ilango Bharathy / 2023 மார்ச் 27 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல இளம் நடிகையொருவர் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஜ்புரி படங்களில் நடித்தன் மூலம் பிரபலமடைந்த ‘அகான்க்ஷா‘ என்ற 25 வயதான நடிகையே நேற்று முன்தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இன்டாகிராமில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென கதறி அழுதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்பது உடற்கூராய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே கூற முடியும் எனவும் இது குறித்த தீவிர விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
‘அகான்க்ஷாவின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago