Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 18 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் இறப்பதற்கு முன்பு, விசிட் அடித்த இடங்கள் என்னென்ன என்பது குறித்து மறைந்த நடிகர் ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர், 2-வது நாயகனாக நடித்திருந்த எம்.ஜி.ஆர் 10 வருட போராடத்திற்கு பிறகு சினிமாவில் நாயகனாக உயர்ந்தார்.
அதன்பிறகு ஒரு முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்த எம்.ஜி.ஆர் பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இயக்குனர் தயாரிப்பாளர் என பல அவதாரங்களையும் எடுத்து வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல், நாடக நடிகராக இருந்தாலும், பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன். அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த சிவாஜி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவரின் படங்களில் நடிப்புகக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இருக்கும். அதே சமயம் எம்.ஜி.ஆர் படங்கள் ஆக்ஷன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வந்தது.
அதேபோல் சினிமாவில் நடித்து பெயரும் புகழும் பெற்ற எம்.ஜி.ஆர், அரசியலிலும் கால்பதித்து வெற்றி கண்ட நிலையில், பிரச்சாரத்திற்கு செல்லாமலே, முதல்வராக வெற்றி பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதே சமயம், தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு மரணமடைந்தார். அவர், மரணத்தை தழுவுவதற்கு முன்பாக, தான் வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய மறைந்த நடிகர் ராஜேஷ், 1985-ல் புரூக்ளினிலிருந்து இந்தியா வந்த எம்.ஜி.ஆர், தான் வாழ்ந்த எல்லா வீடுகளுக்கும் நேரில் சென்று, தான் இருந்த இடங்களை எல்லாம் ஒருமுறை பார்த்துவிட்டு வந்தார்.
இதுதான் உண்மையான அன்பு. பொதுவாக, பலர் தங்கள் வாழ்வின் கடைசி கட்டத்தில், நோய் தீவிரமடைந்து மரணத்தை நெருங்குகிறோம் என்று தெரிந்த பிறகு, எதையும் பார்க்க விரும்ப மாட்டார்கள். ஒரு அறையிலேயே அடைந்து, கடந்த காலத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். பயணிக்க விரும்ப மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் தன் மனதை ஒருநிலைப்படுத்தி, தனது இரண்டாவது மனைவி வசித்த ஊருக்குச் சென்று, அவர்களது முதலிரவு நடந்த கட்டிலில் அமர்ந்தார். அங்கு, அவரது பூஜையறையில் சதானந்தவதி மற்றும் எம்.ஜி.ஆர். போன்றோரின் புகைப்படங்களை வைத்திருந்தார்கள்.
மனைவியுடனான முதலிரவு கட்டிலில் அமந்துள்ளார். யாரும் உள்ளே வர வேண்டாம் என்று செக்யூரிட்டிகளிடம் கூறிவிட்டார். இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் அங்கு சென்றபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் நடக்கவே முடியாது. கிராமப் பகுதி என்பதால், செங்கல்களை அடுக்கி, அதன் மேல் நடந்துதான் உள்ளே சென்றிருக்கிறார்.
உள்ளே சென்று விஸ்வநாத் பணிக்கரைக் கட்டிப்பிடித்துத் தூக்கி ஒரு சுழற்று சுழற்றியிருக்கிறார். தான் இன்னும் பலசாலியாகவும், வலிமையாகவும் இருக்கிறேன் என்பதைக் காட்டிக்கொண்டார். அதன் பிறகு, உள்ளே அமர்ந்து, செக்யூரிட்டிகள் யாரும் உள்ளே வர வேண்டாம் என்று கூறி, நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தார். அவர் சுமார் அரை மணி நேரம் அழுதுவிட்டு, "நான் சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டு வந்திருக்கிறார். அவர் சொன்ன இந்த விஷயம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார். R
4 hours ago
4 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
19 Jul 2025