2025 மே 14, புதன்கிழமை

இலியானா திருமணம் எப்போது?

George   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'திருமணத்துக்கான நேரம் வரும்போதும் கண்டிப்பாக அது நடக்கும். நான் இப்போது திரைப்படங்களில் பிஸியாக உள்ளேன். எல்லோரும் என்னை ஒரு பர்பி பொம்பை போன்றும், கற்பனை செய்ய முடியாத வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் நினைக்கிறார்கள். ஆனால், நான் என் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதன்படி வாழ்ந்து வருகிறேன்' என்று நடிகை இலியானா கூறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அண்ட்ரூவை தீவிரமாக இலியானா காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து கேட்டபோது, இலியானா இவ்வாறு  கூறினார்.

தென்னிந்திய திரைப்படங்களில் அசத்தி வந்த இலியானா, தற்போது முழுநேர பொலிவூட் நடிகையாக மாறிவிட்டார். அக்ஷ்ய் குமாருடன் ருஷ்டம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கிறார். 12ஆம் திகதி வெளியாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .