Janu / 2023 ஜூன் 04 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக தமிழில் இவர் நடிப்பில் 'மாமன்னன்' படம் வெளியாகயிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தனது படங்களின் வாயிலாக அழுத்தமான அரசியலையும் முன் வைத்து வருகிறார். இவரின் அடுத்த படைப்பாக 'மாமன்னன்' படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாகவும் இந்தப்படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், கீர்த்தி சுரேஷ் பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், என்னை பொறுத்தவரை திரையுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலித்தனமான, கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025