Editorial / 2018 ஜூலை 30 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்து கதைகளை, ஐந்து இயக்குநர்களை இயக்க வைத்து படமொன்றை உருவாக்க இயக்குநர் பா.இரஞ்சித் திட்டமிட்டுள்ளார்.
‘காலா’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையில் தீவிரம் காட்டி வருகிறார் பா.இரஞ்சித். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் உள்ளிட்ட விடயங்களை கதை முடிவானவுடன் அவர் தீர்மானிப்பார் என தெரிகிறது.
இதனிடையே தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலமாகப் படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவையும் தயாரித்து வருகிறார் பா.இரஞ்சித்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் இதன் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஐந்து கதைகளை ஐந்து இயக்குநர்களைக் கொண்டு இயக்கவைத்து, அதை ஒரு படமாக உருவாக்க இயக்குநர் பா.இரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.
இதில் ஒரு கதையை மட்டும் அவரே இயக்குவார் எனத் தெரிகிறது. இதர கதைகளை யார் இயக்கவுள்ளார்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார். மேலும், ‘குதிரை வால்’ என்ற பெயரையும் இப்படத்துக்காகப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025