J.A. George / 2022 ஜூன் 07 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை மற்றும் மொடலான மீரா மிதுன் பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த அவர் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசி பலரிடமும் வெறுப்பை சம்பாதித்தார்.
இதன் காரணமாக இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையையும் எதிர்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், அண்மையில் தனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.
அந்த வீடியோவில், 'என்னுடைய சாதனைகள் எதுவும் வெளியே தெரியவில்லை என்ற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன். இன்று, என் பெற்றோரும் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். கடந்த 6 மாத காலமாக என் மீது தொடர் வழக்குகள் போடப்பட்டு வருகிறது.
நீதிமன்றத்துக்கு வழக்குகள் தொடர்பாக அலைந்து திரிவதால் வருமானத்துக்கே வழியில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. இந்த சமூகம் என்னை வாழ முடியாமல் செய்கிறது. இனிமேலும் என்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவர் அதில் பேசியுள்ளார்.
33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago