2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காதலியை கரம்பிடித்தார் அசோக் செல்வன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெகிடி, போர் தொழில் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன். மேலும் ' மை கடவுளே', 'நித்தம் ஒரு வானம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தெகிடி படத்தில் இடம் பெற்றிருந்த "பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்" பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் அசோக் செல்வன். சமீபத்தில் வெளியான போர் தொழில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அசோக் செல்வனும், 'தும்பா', 'அன்பிற்கினியாள்' படங்களில் நாயகியாக நடித்தவரும், நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X