Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 26 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பொலிவூட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் விவாகரத்துப் பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேயும் சுமார் ஆறு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இந்திய அளவில் 2022ஆம் ஆண்டிற்கான பிரபலங்கள் என்ற பட்டியலை அண்மையில் கிரால் ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் பொருட்களின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து 25 பேர் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் இந்தியாவின் பிரபலமான நபராக பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முதலிடத்தைப் பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இதில் முதலிடத்தில் இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையைப் பிடிக்க ரன்வீர் சிங் முயன்றார்.
ஆனால், தீபிகா படுகோனே அவரது கையைப் பிடிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டும் இல்லாமல் ரன்வீர் சிங்கை முகம் கொடுத்துக் கூட பார்க்கவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த ரன்வீர் சிங் வேகவேகமாக முன்னால் நடந்து சென்றுவிட்டார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மேலும் இருவருக்கும் இடையே எதோ பிரச்சினை உள்ளது என்றும் , இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர் எனவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.
எவ்வாறு இருப்பினும் இதுவரை இருவரும் இதுபற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .