Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
J.A. George / 2021 மார்ச் 11 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் மூலம் தமிழ் சினிமாவின் குறும்புத்தனமான நடிகை என்று பெயர் பெற்றவர் ஜெனிலியா.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் பிஸியாக நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார்.
அதனை தொடர்ந்து நடிப்பில் இருந்து ஒதுங்கி அவர் எப்போதும் குடும்பம், குழந்தைகள், திரைப்பட விழாக்கள் என இன்றைக்கும் தனக்கே உரிய குறும்பு தனங்களோடு வலம் வருகிறார் ஜெனிலியா .
இந்நிலையில் எப்போது தனது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜெலியா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டு இருக்கிறார்.
தான் கற்றுக்கொண்ட ஸ்கேட்டிங் திறமையை வீடியோவாக எடுத்து தனது இணையப்பக்கத்தில் வெளியிடலாம் என எண்ணியிருக்கிறார்.
அப்போது ஸ்கேட்டிங் செய்யும்போது தடுமாறி கிழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் தனக்கு ஏற்பட்ட இந்த வலியையும் பொருட்படுத்தாத ஜெனிலியா எப்போதும் போல அதே குறும்பு சிரிப்புடன் இந்த வெற்றிக் கதை தோல்வியில் முடிந்து விட்டது.
ஆனால் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்வேன் எனக் கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
23 minute ago
29 minute ago