2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சமந்தாவின் அதிரடி முடிவு

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகசைதன்யாவை பிரிந்தவுடன் தற்போது அவர் மயோசிட்டிஸ் என்ற நோய்க்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவர் மறுமணம் செய்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்போது அவர் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம்இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கதிட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

எனவே. சமந்தா மறுமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்காக வாழ திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய்தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த ’குஷி’ கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் தனது உடல் முழுமையாக குணமாகிய உடன் அமெரிக்க திரைப்படமான ’சென்னைஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் சில திரைப்பட வாய்ப்புகளை அவர் தற்காலிகமாக தவிர்த்து விட்ட நிலையில் முழுகுணமானவுடன் மீண்டும் திரையுலகில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X