R.Tharaniya / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நட்சத்திர நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற பின்னர் நீண்ட காலமாக தனிமையில் இருந்து வந்தார்.
சமீபத்தில், பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து, கோவை ஈசா மையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல கடையின் திறப்பு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார்.
அவரை நேரில் பார்த்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுக்க முயன்று அவரைச் சூழ்ந்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த சமந்தா, வேகமாக தனது காரை நோக்கிச் சென்று அங்கிருந்து புறப்பட்டார்.
ரசிகர்கள் கூட்டத்திலிருந்து அவர் தப்பிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோன்ற சம்பவத்தை சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலும் சந்தித்திருந்த நிலையில், ரசிகர்களின் கட்டுப்பாடற்ற நடத்தை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து இணையத்தில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago