R.Tharaniya / 2025 ஜூன் 09 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சர்தார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ படம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது.
அத்துடன், இறுதிகட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும்‘சர்தார் 2’ படத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், சூரஜ் வெஞ்சுரமுடு, ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது இதன் இறுதிகட்டபணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் உரிமைகள் விற்கப்பட்டவுடன் வெளியீட்டு திகதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது.
‘சர்தார் 2’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் அடுத்ததாக தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி கவனம் செலுத்தவுள்ளார்.
23 minute ago
39 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
48 minute ago
1 hours ago