Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக் பாஸ் நான்காவது சீசன் ஆரம்பித்து இரண்டாவது நாளே மிகவும் பரபரப்பாக மாறியிருக்கிறது. போட்டியாளர்கள் இடையே இப்போதே மனக்கசப்பு மற்றும் சண்டை ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
சற்று முன் வெளிவந்திருக்கும் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே கிச்சனில் சண்டை வெடித்திருக்கிறது. எச்சில் தெறிக்கிறது என பலமுறை கூறுகிறார்.
இது தொடர்பான வாக்குவாதம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மிகவும் காரசாரமாக நடக்கிறது. அனிதா சம்பத் மிகவும் கோபமாக இது பற்றி பேசிக்கொண்டிருக்க நடிகை ரேகா இடையில் வந்து அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.
மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி கடும் கோபத்தில் கத்துவதும் இந்த மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.
இன்று மதியம் வெளிவந்த இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் அனிதா சம்பத் தன்னுடைய அம்மா பற்றி மிக உருக்கமாக பேசியிருந்தது காட்டப்பட்டிருந்தது.
அப்படி கண்ணீருடன் பேசியது ஒருபுறமிருக்க தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியுடன் கிச்சனில் அனிதா சம்பத் சண்டை போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
2 hours ago
3 hours ago