2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சூப்பர் ஸ்டார்க்கு நன்றி தெரிவித்த உதயநிதி

Freelancer   / 2023 ஜூலை 05 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் பாராட்டுக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் பதிவிட்டுள்ளார். அதில்,  சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X