Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 21 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிரிந்து வாழும் தன்னுடைய கணவர் குறித்து பகீர் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றிய ஒளிபரப்பான சீரியலில் நடித்த பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
கடந்த சில தினங்களாக தன்னுடைய கணவர் தினேஷ் தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். இதனால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் அதனை தொடர்ந்து தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் தெரிவித்து இருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் தினேஷ், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார்.
மேலும் இந்த புகார் தொடர்பாக நடிகை ரச்சிதா மகாலட்சுமியிடமும் தீவிரமாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிகிறது.
25 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
47 minute ago