Editorial / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தமை மிகவும் துரதிஷ்டவசமானது என நடிகை மமிதா பைஜு தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.
கே.வி.என் (KVN) நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், தணிக்கைப் பிரச்சினைகள் காரணமாக இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு முழுத் திரைப்படமும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது தொடர்பாகத் தமிழகக் காவல்துறை இதுவரை 6 பேரைக் கைது செய்துள்ளது. இந்தச் சட்டவிரோத வெளியீட்டால் படக்குழுவினருக்குப் பெரும் நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மமிதா பைஜு, இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகையில்:
“இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது. எத்தனையோ பெரிய கனவுகளும், பலருடைய கடின உழைப்பும் இந்தச் சட்டவிரோத வெளியீட்டினால் வீணாகிப் போயுள்ளன. எங்களது உழைப்பு இத்தகைய ஒரு சூழலுக்குத் தகுதியானது அல்ல.
ஆரம்பத்தில், இது குறித்துச் சமூக வலைதளங்களில் வந்த தகவல்களை நான் நம்பவில்லை; ஏனெனில், அவற்றில் வரும் அனைத்தையும் அப்படியே நம்பிவிட முடியாது. எனது சகோதரர் தான் இந்தத் தகவலை முதன்முதலில் என்னிடம் தெரிவித்தார். ‘ஏன் இப்படி நடந்தது?’ என்று நான் மிகவும் வருந்தினேன். இந்த ‘லீக்’ சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago