R.Tharaniya / 2025 ஜூன் 02 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ஜெயிலர்’ முதல் பாகத்தில், யோகி பாபு என்னை வச்சு செய்துவிட்டார். அதற்கு பதிலடியாக, இரண்டாம் பாகத்தில் நான் அவரை வச்சு செய்ய வேண்டும் என நெல்சன் இடம் ரஜினிகாந்த் கலகலப்பாக கூறியதாக, யோகி பாபு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதல் பாகத்தில் கார் சாரதியாக நடித்த யோகி பாபு, இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, "இந்த காலத்தில் சிறந்த நகைச்சுவை உணர்வுமிக்க இயக்குநர் என்றால் நெல்சனை தான் நான் சொல்வேன். படப்பிடிப்பின் போது ரஜினி சார் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார்.
ரஜினி சார், நெல்சன் இடம் 'யோகி பாபுவை விடக்கூடாது.
முதல் பாகத்தில் என்னை வச்சு செஞ்சிருக்கார். அதனால, இந்த பாகத்தில் அவரை நான் வச்சு செய்வேன்' என்று நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.” என்றார்.
25 minute ago
41 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago
50 minute ago
1 hours ago