Freelancer / 2022 மே 23 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருள்நிதி நடித்த 'டிமான்டி காலணி' வெளியாகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி 'டிமான்டி காலணி' திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று படக்குழுவினர் இதனை கொண்டாடினார்.

இந்நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் 'டிமாண்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கப் போவதில்லை என்றும் அவருடைய உதவியாளர் வெங்கி வேணுகோபால் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் கதையை எழுதுவதோடு இந்த படத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
'டிமாண்டி காலன்' முதல் பாகத்தில் அருள்நிதி இறந்துவிடுவதோடு படம் முடிந்துவிடும். ஆனால் அருள்நிதியை வைத்து மீண்டும் எப்படி இரண்டாம் பாகம்? என்ற கேள்விக்கு 'அது சஸ்பென்ஸ் என்றும் ஆனால் முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி உள்பட முக்கிய கேரக்டர்களும், மேலும் சில புதிய கேரக்டரில் சிலரும் நடிக்கவுள்ளனர் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்றும் அஜய்ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
6 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago
57 minute ago
1 hours ago