J.A. George / 2022 ஜூன் 07 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்றத் திரைப்படத்தில் வைஷ்ணவ் தேஜ்க்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வரும் தி வாரியர் என்றத் திரைப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதையடுத்து தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 41ஆவது திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்களைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்றத் திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார் கிருத்தி ஷெட்டி. இந்தத் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தான் நடிப்பதாக இருந்தது.
கோல்ஷீட் பிரச்னை காரணமாக பிரியங்கா மோகன் விலகிக்கொள்ள, இப்போது அந்த வேடத்திற்கு கிருத்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
18 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
2 hours ago