2025 மே 21, புதன்கிழமை

தமிழில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 08 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவியை தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக இயக்குநர் சசிகுமார் அறிமுகப்படுத்தவுள்ளார்.

சசிகுமாருக்கு ஸ்ரீதேவியிடமிருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், மும்பைக்கு சென்று ஸ்ரீதேவியைச் சந்தித்துள்ளார். இந்நிலையில்,  தனது மகளை தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்துமாறு சசிகுமரிடம் ஸ்ரீதேவி  கேட்டுக் கொண்டார்.

மேலும் "உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. . உங்களுடன் ஜோடியாக என் மகளை அறிமுகப்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சியடைவேன் என்று ஸ்ரீதேவி தெரிவிக்க, மறுப்பின்றி  சசிகுமார் உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்ரீதேவியின் மகள் ஜானவிக்கு தற்போது 14 வயது.  இப்பொழுது முதல்  முயற்சி எடுத்தால்தான், நல்ல கதை, கதாபாத்திரங்கள் தேர்வு என ஒரு வருடம் கழிந்து விடுமென்பதுடன், அதற்குள் ஜானவி கதாநாயகிக்கான  தகுதியடைவார் என ஸ்ரீதேவி கருதுகிறார்.

ஸ்ரீதேவி தனது 16ஆவது  வயதில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தனது மகளையும் 16ஆவது வயதில் அறிமுகப்படுத்த இப்போதிருந்தே ஸ்ரீதேவி முனைப்புக் காட்டுகிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .