Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஸ் கல்யாண். ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘ஓ மணப் பெண்ணே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், தனது மனைவியாகப் போகிற பெண்ணின் கையை கோர்த்தப்படி இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஹரிஷ் கல்யாண், ’புதிய தொடக்கம்’, எனக் குறிப்பிட்டிருந்தார்.
தனது திருமணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாக கூறியுள்ளார்.
இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தை, தொடக்கத்தைத் தொடங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஹரிஸ் கல்யாணின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago
48 minute ago
55 minute ago