Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் நேற்று பொம்மலாட்டம் கலையை பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பாக செய்து காட்டி அனைவரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில் இன்று தெருக்கூத்து கலையை பிரபலப்படுத்த பிக்பாஸ் போட்டியாளர் முயற்சிக்கின்றனர்.
தெருக்கூத்து கலைஞர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க, பயிற்சி கொடுத்தவர்களே அசரும் அளவுக்கு போட்டியாளர்கள் தெருக்கூத்தை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். குறிப்பாக சேரன் தெருக்கூத்தை மிக சிறப்பாக நடித்து காட்டினார். அதே போல் தர்ஷன், சாண்டி நடித்த காட்சிகளும் சிறப்பாக இருந்தது.
மேலும் வனிதா எமதர்மனாகவும், லாஸ்லியா சித்திரகுப்தனாகவும் நடித்த ஒரு காட்சியில் வனிதா 'எங்கே அந்த சித்திரகுப்தன் என்று கேட்க அப்போது ஓடி வந்த லாஸ்லியா, சாண்டியை தள்ளிவிட, அவர் கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தெருக்கூத்து நாடகத்தின் ஒரு பகுதியா? அல்லது லாஸ்லியாவின் சொதப்பலா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.
மேலும் தமிழே தெரியாத ஷெரினும் மிகுந்த ஆர்வத்துடன் தெருக்கூத்து டாஸ்க்கில் கலந்து கொண்டு அசத்துகிறார். மொத்தத்தில் இந்த தெருக்கூத்து டாஸ்க்கால் போட்டியாளர்கள் சண்டை, சச்சரவை மறந்துவிட்டு முழுநேர எண்டர்டெயினர்களாக மாறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago