Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கதையை திரைப்படமாக்க எடுப்பதற்கு பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், 'சுதந்திர தியாகிகள் பலரது வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டுள்ள நிலையில், எனக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வாழ்கையை ஜனரஞ்சகமான முறையில் திரைப்படமாக்க ஆர்வம் உள்ளது. அவரைப்பற்றிய நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றை வர்த்தக ரீதியாக சொன்னால் விறுவிறுப்பாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
மேலும், சுதந்திர இந்தியா குறித்து கே.எஸ்.ரவிகுமார் கூறியபோது, 'சுதந்திரத்துக்கு முன்பு அந்நியர்களின் அதிகாரத்தில் அடிமைகளாக இருந்தோம். இப்போது நம்மால் தேர்வு செய்யப்பட்டவர்களின் ஆட்சி அதிகாரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பு நம்மவர்களில் சில எட்டப்பர்கள் இருந்ததுபோல் இப்போதும் சில எட்டப்பர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago