J.A. George / 2022 மார்ச் 15 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக ”காத்துவாக்குல 2 காதல்” உட்பட பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
நீண்ட காலமாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அண்மையில் இரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
அத்துடன், திருமணமும் யாருக்கும் சொல்லாமல் எளிமையாக நடக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், திருமணம் முடிந்த பிறகுதான் அனைவருக்கும் விஷயத்தை கூறுவோம் எனவும் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்த நிலையில் இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது நயன்தாரா திருமணம் ஆன பெண்களை போன்று நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.
இதனால் இருவருக்கும் இரகசியமாக திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
47 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026