Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு, ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாம்.
தமிழில், ‘ரிச்சி’ திரைப்படத்தின் மூலம், நாயகனாக அறிமுகமாவுள்ளார் நிவின் பாலி. அத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
மலையாளத்தில், தயான் ஸ்ரீனிவாசன் இயக்குநராக அறிமுகமாவுள்ள புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிவின் பாலி. இவர், மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருக்கும் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி ஆவார்.

‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதில், நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அஜுவர்கீஸ் மற்றும் விஷாக் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். தினேஷன் என்ற கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், ஷோபா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்கவுள்ளார்கள்.


23 minute ago
34 minute ago
40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
40 minute ago
55 minute ago