Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 22 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும்பாவூர்,எர்ணாகுளம் அருகே சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரபல சின்னத்திரை நடிகையொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஞ்சு கிருஷ்ணா என்ற 32 வயதான நடிகையே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகக் திருக்காக்கரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தங்களைக் கணவன்-மனைவி என்று கூறிக்கொண்ட இவர்களின் நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தினரை சந்தேகம் அடையச் செய்துள்ளதாகவும், தினமும் இவர்களது வீட்டிற்கு ஏராளமான இளைஞர்,யுவதிகள் வருகை தருவதாலும் அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதன்பேரில் விரைந்து சென்ற பொலிஸார், அஞ்சு கிருஷ்ணா, சமீர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். இச்சோதனையில் 56 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்போதைப்பொருளைக் கைப்பற்றிய பொலிஸார் அஞ்சு கிருஷ்ணாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சமீரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .