J.A. George / 2023 ஜூன் 06 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டும் இன்றி தற்போது அவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல தமிழ் ஹீரோக்களில் ஒருவர் மாதவன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை பல வெற்றி படங்களை இயக்கிய ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அயோத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025