2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் வந்தடைந்தார்

Editorial   / 2025 ஜூன் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி.கபில

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஜெர்மி அயர்ன்ஸ் கட்டுநாயக்க விமான நிலையத்தை   செவ்வாய்க்கிழமை (17) இரவு 11.00 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

சுமார் 12 வருடங்களுக்கு பின்னர் ஹொலிவுட் நடிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள சர்வதேச திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X