Simrith / 2023 ஜூன் 11 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் எனும் பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019-ல் முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் மலர்ந்தது.
2020-ம் ஆண்டு ஹிமானி சிங்கை, பிரபுதேவா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சமீபத்தில் மனைவி ஹிமானியுடன் பிரபுதேவா திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டார். அப்போதுதான் ஹிமானி சிங் புகைப்படம் வெளியானது.

தற்போது பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரபுதேவா-ரம்லத்துக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். இப்போது முதல் பெண் குழந்தைக்கு பிரபுதேவா தந்தையாகி இருக்கிறார்.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025