2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பூஜாவுக்கு அந்த இடத்தில் அறுவை சிகிச்சை?

Editorial   / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த அவர், விஜய்யுடன் நடித்த ‘பீஸ்ட்’படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார்.

இந்நிலையில் அவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக குண்டூர்காரம் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென அதில் இருந்து விலகினார். அடுத்து பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலும் நடிக்க இருந்தார். அதில் இருந்தும் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தபோது கால் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த வருடம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், வலி தொடர்வதால் அவர் மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் அவர் படங்களில் இருந்து விலகி இருப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி பூஜா ஹெக்டே ஏதும் அறிவிக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X