2025 மே 16, வெள்ளிக்கிழமை

மே முதலாம் திகதி கபாலி டீசர்

George   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெறி திரைப்படத்தின் வெற்றியில் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. தெறியைத் தொடர்ந்து தாணுவின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கபாலி. 

கடந்த சில நாட்களாக டப்பிங் பேசி வந்த ரஜினிகாந்த் தனது டப்பிங் வேலைகளை சில தினங்களுக்கு முடித்து விட்டார். தற்போது தன்ஷிகா டப்பிங் பேசி வருகிறார். 

கபாலி படத்தின் டீஸர் தயாராகிவிட்டது. விரைவில் இதை வெளியிட உள்ளனர்.

உழைப்பாளர் தினமான மே 1ஆம் திகதி  கபாலி டீஸரை வெளியிட இயக்குநர் பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். 

அடிப்படையில் கம்யூனிச கொள்கை கொண்டவர் பா.ரஞ்சித். எனவே, கபாலி டீசரை வெளியிட உழைப்பாளர் தினத்தை தேர்வு செய்துள்ளார்;.

மே 1ஆம் திகதி அஜீத் பிறந்தநாளும் கூட, கண்டிப்பாக அன்றைய தினம் சமூகவலைதளங்களில் அஜீத்தின் பிறந்தநாள் மற்றும் கபாலி  டீசர் என்பன டிரெண்ட்டிங்கில் தெறிக்கப்போவது உறுதி. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .