2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மாஸ்டர் திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முடக்கத்தால் தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

திரையரங்கில் ஐம்பது சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பெரிய நட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியும் அனுமதி வேண்டும் என்று அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X