2025 மே 21, புதன்கிழமை

மீண்டும் கார் ரேஸில் அஜித்

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , மு.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 50ஆவது படத்தின் அறிவிப்பை சீக்கிரம் அறிவிப்பார் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே இன்னமும் காத்திருக்கிறது. கௌதம் மேனனின் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக முன்னர் தகவல் கசிந்தது, அதன் பின்னர் அது புஷ்வாணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் அஜித், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிப்பதாகவும் இருந்தது. இவை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு இப்போது கார் ரேஸூக்குத் தயாராகிவிட்டார் தல.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கின்ற கார் ரேஸில் தனது பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுதே பயிற்சிகளை ஆரம்பித்து விட்டாராம் அஜித்.

எப்பொழுதும் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் இவர் கடந்த சில காலங்களாக பல சிக்கல்களில் சிக்கித் தவித்தார். தமிழ் திரையுலகினரின் சில நடவடிக்கைகளால் துவண்டுபோயிருந்த தல, இப்பொழுதெல்லாம் பொது வாழ்க்கையிலிருந்து மீண்டு சுயவாழ்க்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .