Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படம் தயாரான உடனே இயக்குநர்கள் பலருக்கும் திரையிட்டு காட்டப்பட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்த விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் என அனைவரும் பேசினார்கள். இதில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். இறுதியாக “கடைசியாக ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் அகிலா இளங்கோவன். 6-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து உன்னை தெரியும். 10-ம் வகுப்பில் இருவரும் நட்பாக இருக்கிறோம்.
இந்த இடத்தில் உன்னிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு ஒன்று கேட்க வேண்டும் என தோன்றுகிறது. வரும் அக்டோபர் 31-ம் திகதி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்கிறேன். ஐ லவ் யூ சோ மச். நான் இந்தளவுக்கு சிறந்த நபராக இருப்பதற்கு எங்க அம்மாவுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு அகிலாவுக்கு இருக்கிறது” என்று தன் பேச்சினை முடித்தார் அபிஷன் ஜீவிந்த். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அபிஷன் பேசும்போது அதே விழாவில் அகிலாவும் கலந்துகொண்டார். இந்தப் பேச்சுக்கு அகிலா கண் கலங்கிய வீடியோ பதிவும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தக் காதலுக்காக கண்டிப்பாக இப்படம் பெரும் வெற்றியடையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
10 minute ago
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
2 hours ago