Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 05 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு பூஜை வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (05) நடைபெற்றது.
இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முழுநீள திரைப்படமாக இது காணப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களை உள்ளடக்கி இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.
நிகழ்வில் கலைஞர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சம்பிரதாயபூர்வமாக படப்பிடிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன்பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி, ஏனைய நடிகர்கள், திரைப்படம் சார்ந்து பணியாற்றும் ஏனையோர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஷவாஹிர், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த புலம்பெயர் தமிழர்களும் இதில் கலந்துகொண்டனர்.
43 minute ago
59 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
59 minute ago
9 hours ago