Editorial / 2023 ஜூன் 29 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட் நடிகை நீனா குப்தா 1982 ஆம் ஆண்டு வெளியான சாத் சாத் இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2018 இல் வெளியான படாய் ஹோ திரைப்படத்தின் மூலம் அவர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளார். 63 வயதான நீனா குப்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில் தனது அனுபவம் குறித்து நீனா குப்தா கூறியதாவது:-
ஒரு நடிகராக நீங்கள் எல்லா வகையான காட்சிகளையும் செய்ய வேண்டும், சில சமயங்களில் சேற்றில் அடியெடுத்து வைக்க வேண்டும், சில சமயங்களில் வெயிலில் பல மணி நேரம் நிற்க வேண்டும்
பல வருடங்களுக்கு முன்பு, நான் திலீப் தவானுடன் ஒரு சீரியல் செய்தேன். இது இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலில் உதட்டோடு உதடு சேர்க்கும் லிப்லாக் முத்தக் காட்சியைக் கொண்டிருந்தது.
என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் அந்த காட்சிக்கு தயாராக இல்லை. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் அதைச் சமாளிக்க நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.
சிலரால் கேமரா முன் நகைச்சுவை செய்ய முடியாது, சிலரால் கேமரா முன் அழ முடியாது. நான் முத்தமிடும் காட்சியில் பதட்டமடைந்தேன். அது முடிந்தவுடன், டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன். எனக்குத் தெரியாத ஒருவரை முத்தமிடுவது மிகவும் கடினமாக இருந்தது என கூறினார்.
நீனா குப்தா பேசும் சீரியல் திலீப் தவானின் தில்லாகி. அதுவே திரையில் அவரது முதல் முத்தக் காட்சி.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago