2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விபத்துக்குள்ளான விஜய் தந்தை: நடந்தது என்ன?

George   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளையதளபதி விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், கேரளாவில் கார் விபத்தில் காயம் அடைந்ததாகவும், தலையிலும் கழுத்திலும் படுகாயம் ஏற்பட்டதால் அவர் கேரளாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒருசில மணி நேரங்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
 
ஆனால் உண்மையில் அவருக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. கேரளாவில் தனது அடுத்த திரைப்படம் குறித்து கதை விவாதத்தில் இருந்ததாகவும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் குளியலறையில் இருந்து தவறி விழுந்ததால் சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பினர் கூறியபோது 'அவருக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது முற்றிலும் தவறான செய்தியாகும். குளித்துவிட்டு வரும்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடம் உள்ளார்' என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X