2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெறுப்பாக இருக்கிறது வேண்டாமே!

George   / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்த நடிகைக்கும் அவருக்கும் காதல், அவருக்கும் அந்த நடிகைக்கும் கல்யாணம். சினிமாவில் நடிக்கும் நடிகைகளைப் பற்றிய வதந்தியான செய்திகள் என்றால் திடீர் திடீர் என கிளம்பும் இந்த இரண்டே இரண்டு தான். 

அதில் சில வதந்தியாகவே போய்விடும், சில உண்மையாகிவிடும். காலம் காலமாக இவ்வாறுதான் நடக்கின்றது.

இந்நிலையில்,  திடீரென தமன்னாவைப் பற்றிய ஒரு காதல் வதந்தி ஹைதராபாத்தில் இருந்து மையம் கொண்டு செவ்வாய்க்கிழமை வெளியானது. 

தமன்னா ஒரு சொப்ட்வேர் இஞ்சினியரைக் காதலிப்பதாகவும், அவரை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்றும் யாரோ வதந்தியை கிளப்பி விட்டார்கள். 

அது மட்டுமல்ல திருமணத்துக்குப் பிறகு அவர் நடிக்க மாட்டார் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு விட்டன. அந்தச் செய்தி தன் காதில் விழுந்ததுமே தமன்னா கோபப்பட்டுவிட்டார்.

'இன்னும் நீண்ட நாட்களுக்கு நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. எனவே, தயவு செய்து இப்படி எந்த ஆதாரமற்ற செய்திகளையும் வெளியிடாதீர்கள். வெறுப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதற்கு முன் சரிபார்த்துவிட்டு வெளியிடலாம். இதெல்லாம் வெட்கக்கேடான செயல்' என கோபத்துடன் கொந்தளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .