2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வில்லனாகும் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்

Freelancer   / 2022 ஜூன் 12 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகை ஹன்சிகா நடித்த 'மஹா' உள்பட ஒரு சில திரைப்படங்கள் விரைவில் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில், நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் வெளியாகி உள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் ஹன்சிகா நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஆரி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் ஜனனி துர்கா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யா நடித்த 'கலாபக் காதலன்' என்ற திரைப்படத்தை கடந்த 2006ஆம் ஆண்டு இயக்கிய இகோர் என்பவர்தான் இந்த படத்தை இயக்கி வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, பொள்ளாச்சி உள்பட ஒரு சில இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .