R.Tharaniya / 2025 மார்ச் 31 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரவி அரசு படத்தில் நடித்து, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிப்பதற்கு துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது.
‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களில் நடிக்க திட்டமிட்டார் விஷால். ஆனால், பட்ஜெட் பிரச்சினையால் எதுவுமே நடைபெறாமல் இருந்தது. இதனால் தனது நிறுவனம் மூலம், ரவி அரசு படத்தினை அவரே தயாரித்து நடிக்க முடிவு செய்துவிட்டார்.
ரவி அரசு படத்தினை முடித்துவிட்டு, ‘துப்பறிவாளன் 2’ படத்தினை இயக்குவார் விஷால் எனக் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்து முடித்துவிட்டுதான் படம் இயக்கும் பணிகளைத் தொடங்குவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

47 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
1 hours ago