Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பெரும்பான்மை இனத்தோரை மாத்திரம் திருப்திப்படுத்தும் நல்லாட்சியின் பிரயத்தனங்கள் வெற்றியளிக்காது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் புதன்கிழமை (04) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'பெரும்பான்மையின மக்களை முதன்மைப்படுத்தி சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளை நசுக்க முயன்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதி சிறந்த எடுக்காட்டாகும்'
'தமது தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மையினர் அதிகம் உள்ளதால், அவர்களும் கடும் போக்காகச் சிந்திப்பார்கள் எனக் கருதி இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்களைத் திருப்திப்படுத்தலாம் என்று முட்டாள்த்;தனமாக கணக்குப் போட்டு இன்று சில அமைச்சர்கள் செயற்படுகின்றனர்.
சிறுபான்மையினரின் அபிலாஷைகளை மையப்படுத்தி நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே சிறுபான்மையினர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.
ஆனால், இன்று சில அமைச்சர்களின் செயற்பாடுகள் காரணமாக நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை இழப்பதுடன், இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் நசுக்கி முன்னேற முயன்ற எந்த அரசாங்கமும் நீடிக்கவில்லை என்பதைக் கருத்திற்கொண்டு, மாகாணங்கள் தொடர்பில் மேலும் கரிசனை செலுத்தி, அவற்றுக்கான அதிகாரங்களில் தலையீடு செய்யாமல் மாகாணங்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்கி அரசாங்கம் உண்மையான நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாகச் செயற்பட வேண்டும்.
அத்துடன், சிறுபான்மையின மக்கள் தொடர்ந்தும் தமக்கான அபிலாஷைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் யாரிடமும் கையேந்தக் கூடாத நிலைமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago